சிப்பாங், மே 27: சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகத்தின் (PKNS) மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ், டிங்கில், புக்கிட் பாஜா ஓராங் அஸ்லி கிராமத்தைச் சேர்ந்த 100 நிலப் பயனாளர்களுக்கு அவர்கள் மேம்படுத்திய நிலத்திற்காக 200,000 ரிங்கிட் வரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம், இவர்களுக்கு 10 சதவீத முன்பணம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது பயன்படுத்தப்பட்ட நிலப்பரப்பிற்கான இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக மாநில வீட்டுவசதித் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ போர்ஹான் அமான் ஷா தெரிவித்தார்.
"இழப்பீட்டு மதிப்பீடு கட்டம் கட்டமாக நடைபெற்று வருகிறது. மேலும் இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக காசோலைகள் வழங்கப்படும்," என்று நேற்று சைபர் வேலி PKNS காட்சியகத்தில் நடைபெற்ற புக்கிட் பாஜா ஓராங் அஸ்லி கிராம நிலப் பயனாளர்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் அவர் கூறினார்.
சம்பந்தப்பட்ட நிலத்தின் பரப்பளவு மற்றும் அவர்கள் அந்தப் பகுதியில் வாழ்ந்த கால அளவு ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டு, நியாயமான முறையில் இந்த இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
"பழங்குடியின மக்களின் நலன்களை நாங்கள் எப்போதும் கருத்தில் கொள்கிறோம். அவர்கள் நிலத்தை எந்த அளவுக்குப் பயன்படுத்தினார்கள், எத்தனை ஆண்டுகளாக அங்கு வசிக்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ், 1,000 சதுர அடி பரப்பளவிலான தனி வீடும், 100,000 ரிங்கிட் ரொக்கமும், இடமாற்ற உதவித் தொகையாக 7,000 ரிங்கிட்டும் வழங்கப்படுவதாக போர்ஹான் கூறினார்.
மேலும், PKNS-இன் மதிப்பீட்டின்படி, விவசாயப் பயிர்களுக்கான இழப்பீடாக 200,000 ரிங்கிட் வரை பெறவும் இந்த மக்கள் தகுதி பெற்றுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
புக்கிட் பாஜா ஓராங் அஸ்லி கிராமத்தைச் சேர்ந்த 100 பேருக்கு RM200,000 வரை இழப்பீடு வழங்கப்பட்டது
27 மே 2026, 10:22 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
ஓராங் அஸ்லி சமூகத்தினருக்கான புதிய வீட்டு வசதி திட்டம் - பாப்பாராய்டு
Shalini Rajamogun, Sheeda Fathil
9 ஜூன் 2026

selangor
ஓராங் அஸ்லி மக்களின் குடியிருப்புகளை அரசிதழில் வெளியிடும் பணிகளைச் சிலாங்கூர் அரசு தீவிரப்படுத்துகிறது
Shalini Rajamogun
5 ஜூன் 2026

selangor
ஓராங் அஸ்லி கிராமங்களின் நிலப்பிரச்சனை குறித்து சிறப்பு கூட்டத்தில் விவாதம்
Shalini Rajamogun
22 மே 2026

national
ஓராங் அஸ்லி கிராமங்களிலும் ருக்கூன் தெத்தங்கா (KRT) திட்டத்தை விரிவுபடுத்த அரசாங்கம் தயார்
Shalini Rajamogun
1 மார்ச் 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



