சிலாங்கூர் உயர்கல்வி நிதியுதவியைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 5,000-ஆக அதிகரிக்கப்படும்: மந்திரி பெசார்

6 ஆகஸ்ட் 2026, 7:06 AM
சிலாங்கூர் உயர்கல்வி நிதியுதவியைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 5,000-ஆக அதிகரிக்கப்படும்: மந்திரி பெசார்

ஷா ஆலாம், ஆகஸ்ட் 6 – அடுத்து ஆண்டு சிலாங்கூர் மாநில அரசின் உயர்கல்வி நிதியுதவியைப் (HPIPT) பெறுபவர்களின் எண்ணிக்கையை 5,000ஆக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் HPIPT உதவிக்கான விண்ணப்பங்கள் 5,000க்கும் அதிகமாகப் பதிவாகியுள்ள நிலையில், தற்போதுள்ள 3,000 பயனாளிகளின் எண்ணிக்கையை மறுபரிசீலனை செய்து வருவதாக அவர் கூறினார்.

எனவே, மாநிலத்தின் நிதி நிலைமைக்கு ஏற்ப பயனாளிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறோம்,” என்று அவர் கூறினார்.

இதனிடையே, பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், HPIPT விண்ணப்ப காலத்தையும் மாநில அரசு மறுபரிசீலனை செய்து வருகிறது.

மேலும், மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் சேரும் கால அட்டவணைக்கு ஏற்ப விண்ணப்ப காலத்தை மாற்றியமைப்பது குறித்து ஆராயப்படும்.

இதற்கிடையில், வெவ்வேறு காலகட்டங்களில் உயர்கல்வியைத் தொடங்கும் மாணவர்களுக்குக் கூடுதல் வாய்ப்பை வழங்கும் வகையில், HPIPT விண்ணப்பத்தை ஆண்டுக்கு இரு முறை திறப்பது குறித்தும் மாநில அரசு பரிசீலித்து வருவதாக மந்திரி பெசார் தெரிவித்தார்.

HPIPT திட்டத்தின் கீழ், அங்கீகரிக்கப்பட்ட பொது மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வியைத் தொடரும் சிலாங்கூர் மாணவர்களுக்கு 1,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கப்படுகிறது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.