ஆகஸ்ட் 12 வரை எரிபொருள் விலையில் லிட்டருக்கு 5 சென் குறைப்பு

6 ஆகஸ்ட் 2026, 1:20 AM
ஆகஸ்ட் 12 வரை எரிபொருள் விலையில் லிட்டருக்கு 5 சென் குறைப்பு

கோலாலம்பூர், ஆகஸ்ட் 6 – RON97, மானியம் வழங்கப்படாத RON95 மற்றும் டீசல் ஆகியவற்றின் சில்லறை விலை இன்று முதல் ஆகஸ்ட் 12 வரை லிட்டருக்கு 5 சென் குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்தக் காலப்பகுதியில் RON97 பெட்ரோல் லிட்டருக்கு RM4.35, மானியம் வழங்கப்படாத RON95 பெட்ரோல் RM3.77, மானியம் வழங்கப்படாத டீசல் RM4.57 என்ற விலையில் விற்பனை செய்யப்படும்.

அதேவேளையில், மானியம் வழங்கப்படும் எரிபொருட்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

உலகளாவிய அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழ்நிலைகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மை காரணமாக சர்வதேச எண்ணெய் சந்தையில் தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டுவருவதாகவும் நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும், உலகளாவிய விலை உயர்வின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் மற்றும் வர்த்தகத் துறையைப் பாதுகாக்கும் நோக்கில் BUDI95, BUDI Diesel, SKPS மற்றும் SKDS போன்ற இலக்குப்படுத்தப்பட்ட மானியத் திட்டங்களை மடாணி அரசாங்கம் தொடர்ந்து செயல்படுத்தும் என்று நிதி அமைச்சு உறுதியளித்துள்ளது.

அத்துடன், பொதுமக்கள் எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும், பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுவதோடு தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதன் மூலம் தேசிய எரிபொருள் விநியோகம் மற்றும் மானியச் செலவினங்களின் அழுத்தத்தைக் குறைக்க முடியும் என்றும் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.