கோலாலம்பூர், அக்.1: RON97, மானியமற்ற RON95 பெட்ரோலின் சில்லறை விலை லிட்டருக்கு தலா 5 சென் குறைக்கப்படுவதுடன், மானியமற்ற டீசல் விலையும் லிட்டருக்கு 15 சென் குறைக்கப்பட்டுள்ளது.
RON97 பெட்ரோல் லிட்டருக்கு RM5 ஆகவும், மானியமற்ற RON95 லிட்டருக்கு RM4.52 ஆகவும், மானியமற்ற டீசல் லிட்டருக்கு RM5.27 ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விலைகள் அக்டோபர் 1 முதல் 7ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று நிதி அமைச்சு அறிக்கையில் தெரிவித்தது.
உலகளாவிய கச்சா எண்ணெய் விலை குறைந்ததைத் தொடர்ந்து இந்த விலைக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் தீர்வு காணப்படாத நிலையில், பெட்ரோலியப் பொருட்களின் விலையில் ஏற்ற இறக்கம் தொடர்ந்து நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய கிழக்கில் நிகழும் புதிய தாக்குதல்கள் மீண்டும் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்துவதற்கான அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அமைச்சு எச்சரித்துள்ளது.
உலகளாவிய விலை ஏற்ற இறக்கங்களின் தாக்கத்திலிருந்து பொதுமக்களையும் வர்த்தகத் துறையையும் பாதுகாக்க மடாணி அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என அமைச்சு உறுதியளித்துள்ளது.





