கிள்ளான் ஆற்றில் இந்தோனேசியப் பெண்ணின் சடலம் மீட்பு; போலீஸ் விசாரணை

5 ஆகஸ்ட் 2026, 8:50 AM
கிள்ளான் ஆற்றில் இந்தோனேசியப் பெண்ணின் சடலம் மீட்பு; போலீஸ் விசாரணை

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 5 — சுபாங் ஜெயா, USJ 1 பகுதியில் தொழிற்சாலை ஒன்றின் அருகே உள்ள கிள்ளான் ஆற்றில் இந்தோனேசியப் பெண் ஒருவரின் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டது.

சடலம் கண்டெடுக்கப்பட்டது குறித்துப் நண்பகல் 12.58 மணி அளவில் பொதுமக்களிடமிருந்து புகார் வந்ததாகச் சுபாங் ஜெயா மாவட்டக் காவல்துறை தலைவர் உதவி ஆணையர் வான் அஸ்லான் வான் மாமட் தெரிவித்தார்.

"முதற்கட்ட விசாரணைகளில், இறந்தவரின் முகம் ஏற்கனவே அழுகிய நிலையில் இருந்ததும், அவரது கை, கால் தோல்கள் உரிந்து போயிருந்ததும் கண்டறியப்பட்டது.

அப்பெண் மஞ்சள் நிற ஜாக்கெட்டும் வெளிர் நிற ஜீன்ஸும் அணிந்திருந்தார் என தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாள அட்டையை இருந்த ஒரு தோல்பையை (sling bag) போலீசார் கண்டெடுத்ததாகவும் வான் அஸ்லான் கூறினார்.

இறப்புக்கான காரணத்தைக் கண்டறிவதற்காகச் சடலம் உடற்கூறாய்வுக்காகச் செர்டாங் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு இச்சம்பவம் திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.