கிள்ளானில் கண்காணிக்கும் சிசிடிவி கேமராக்கள்: குப்பை கொட்டிய மூவருக்கு அபராதம்

14 செப்டெம்பர் 2026, 3:55 AM
கிள்ளானில் கண்காணிக்கும் சிசிடிவி கேமராக்கள்:  குப்பை கொட்டிய  மூவருக்கு அபராதம்

ஷா ஆலம், செப் 14: கிள்ளான் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பொது இடங்களில் குப்பை கொட்டிய மூன்று வாகன உரிமையாளர்கள், மறைக்காணி ( CCTV) பதிவின் மூலம் அடையாளம் காணப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.

சிசிடிவி கண்காணிப்பின் மூலம் தாமான் செந்தோசா, புக்கிட் கூடா மற்றும் பண்டார் புக்கிட் திங்கி ஆகிய பகுதிகளில் இந்த விதிமீறல்கள் கண்டறியப்பட்டதாக கிள்ளான் அரச மாநகர் மன்றம் தெரிவித்தது.

அடையாளம் காணப்பட்ட மூன்று வாகன உரிமையாளர்களும் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக அம்மன்றம் குறிப்பிட்டது.

தாமான் செந்தோசா பகுதியில் கடந்த ஆகஸ்ட் 2 -ஆம் தேதி ஒரு வாகனம் வீட்டுக் கழிவுப் பொருட்களைக் கொட்டுவது கேமராவில் பதிவானது.

மற்றொரு நடவடிக்கையில், புக்கிட் கூடா பகுதியில் இதே போன்ற குற்றத்தைச் செய்த வேறொரு வாகனம் கண்டறியப்பட்டு, உரிமையாளரை அமலாக்க அதிகாரிகள் தேடி கண்டுபிடித்தனர்.

இதற்கிடையில், கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி பண்டார் புக்கிட் திங்கி பகுதியில் பொது இடத்தில் குப்பை கொட்டிய மற்றொரு வாகன உரிமையாளரையும், கிள்ளான் மாநகர் மன்றம் கண்டுபிடித்தது.

இம்மூவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டு, இனி இச்செயலை செய்யக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

கிள்ளான் மாநகரின் தூய்மையைத் தொடர்ந்து பேண, மறைக்காணி கண்காணிப்பின் மூலம் அதன் அமலாக்கத்தை தீவிரப்படுத்துமென மாநகர் மன்றம் தெரிவித்தது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.