கிள்ளானில் 12 மாற்றுத்திறனாளி தொழில்முனைவோருக்கு வர்த்தக வாய்ப்பு

12 செப்டெம்பர் 2026, 9:30 AM
கிள்ளானில் 12 மாற்றுத்திறனாளி தொழில்முனைவோருக்கு வர்த்தக வாய்ப்பு

கிள்ளான், செப். 12: 12 மாற்றுத்திறனாளி தொழில்முனைவோருக்கு வருமானம் ஈட்டுவதற்கு வாய்ப்பளிக்க வர்த்தகத் தளத்தை GM Klang Wholesale City ஏற்பாடு செய்துள்ளது.

GM Klang மற்றும் Koperasi Usahawan MyOKU Selangor Bhd (MyOKU) ஆகியவற்றுக்கு இடையிலான ஒத்துழைப்பாக இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

‘Terang Kentara’ நிகழ்ச்சியையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள Bazar Usahawan OKU, செப்டம்பர் 11 முதல் நாளை வரை நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியின் மூலம் மாற்றுத்திறனாளிகள் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் புதிய வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

இதனை GM Klang நிறுவனத்தின் பிராண்ட் தொடர்பாடல் நிர்வாகி நூர்ஹானி யாஸ்மீன் முகமட் ஸைனான் தெரிவித்தார்.

இந்த வார இறுதியில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு 5,000க்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்க்க GM Klang இலக்கு நிர்ணயித்துள்ளது.

GM Klang மற்றும் கிள்ளான் அரச நகர மன்றத்தின் (MBDK) உரிமம் வழங்கும் பிரிவின் தொடர்ச்சியான ஆதரவுக்கு MyOKU தலைவர் முகமட் அஸ்ராஃப் மஹாட் நன்றி தெரிவித்தார்.

MyOKU-வைச் சேர்ந்த தொழில்முனைவோர் தங்களது வர்த்தக நடவடிக்கைகளுக்குத் தேவையான அனுமதிகளைப் பெறுவதற்கான நடைமுறைகளை எளிதாக்குவதில் MBDK உரிமம் வழங்கும் பிரிவு முக்கிய பங்காற்றியதாக அவர் கூறினார்.

2020ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட MyOKU, மாற்றுத்திறனாளிகள், ஒற்றைத் தாய்மார்கள் மற்றும் B40 சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தொழில்முனைவுத் திறன் பயிற்சி, தொடர்ச்சியான வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு கட்டமைப்புகளை வழங்குவதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாக அஸ்ராஃப் தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.