கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 - கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக நம்பப்படும் பதின்மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் மலேசியாவை சேர்ந்தவர்கள் 5 பேருடன் மீதமுள்ளவர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்
புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ ஹுசேன் உமர் கான் இந்தத் தகவலை வெளியிட்டார்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 21.26 மில்லியன் ரிங்கிட் ஆகும்.
இந்த போதைப்பொருட்கள் அனைத்தும் நிலம் மற்றும் கடல் வழியாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு, பின்னர் ஐரோப்பிய நாடுகளுக்குக் கடத்தப்பட இருந்ததாக நம்பப்படுகிறது.
கடந்த ஜூலை இருபத்தேழு முதல் முப்பத்தொன்றாம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட `Ops Khas KLIA` கிளியா' எனப்படும் சிறப்பு சோதனையின் கீழ் இந்த கைது நடவடிக்கை செயல்படுத்தப்பட்டது.







