உலகப் புகழ்பெற்ற மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா பனிச்சரிவில் சிக்கி மரணம்

2 ஆகஸ்ட் 2026, 8:52 AM
உலகப் புகழ்பெற்ற மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா பனிச்சரிவில் சிக்கி மரணம்

ஸ்கர்டு, ஆகஸ்ட் 2 — உலகின் புகழ்பெற்ற மலையேற்ற வீரரான நிர்மல் புர்ஜா, வடக்கு பாகிஸ்தானில் உள்ள பிராட் பீக் (Broad Peak) சிகரத்தில் மலையேற்றத்தின் போது ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி, தனது ஒன்பது உறுப்பினர்களுடன் பரிதாபமாக உயிரிழந்தார்.

புர்ஜாவின் மலையேற்ற மேலாண்மை நிறுவனமான 'எலைட் எக்ஸ்பெடிஷன்ஸ்' (Elite Expeditions), மோசமான வானிலை நடுவே மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்குப் பிறகு, 43 வயதான மலையேற்ற வீரரின் மரணத்தை சனிக்கிழமை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது.

இதுகுறித்து அந்நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மிகுந்த சோகத்தோடும் வேதனையோடும், பிராட் பீக்கில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக நிர்மல் புர்ஜா உயிர் இழந்ததை உறுதிப்படுத்துகிறோம்," என்று தெரிவித்துள்ளது.

புர்ஜா தலைமையிலான பன்னாட்டு மலையேற்றக் குழுவினர் பிராட் பீக் உச்சியைக் நோக்கி முன்னேறிச் சென்றுகொண்டிருந்தபோது கடந்த வியாழக்கிழமை இந்த எதிர்பாராத பனிச்சரிவு விபத்து நிகழ்ந்தது. இதனால் அக்குழுவினருடன் இருந்த தொடர்புகள் முழுமையாகத் துண்டிக்கப்பட்டன.

கில்ஜித்-பால்டிஸ்தான் பிராந்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவலின்படி, சில உடல்கள் ஹெ்கிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு, அதிகாரப்பூர்வ அடையாளத்தைக் கண்டறிவதற்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இதுவரை அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்டவர்களில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண், ஓமனைச் சேர்ந்த ஒரு பெண் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த ஒரு ஆண் அடங்குவர்.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.