நெகிரி செம்பிலான் தேர்தல்: பாரிசான் நேசனல் - பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கு வெற்றி

1 ஆகஸ்ட் 2026, 4:51 PM
நெகிரி செம்பிலான் தேர்தல்: பாரிசான் நேசனல் - பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கு வெற்றி

சிரம்பான், ஆகஸ்ட் 2 - 16ஆவது நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில், 36 சட்டமன்றத் தொகுதிகளில் பாரிசான் நேசனல் (BN) 18 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணையத்தின் (SPR) அதிகாரப்பூர்வ முடிவுகள் தெரிவிக்கின்றன.

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, பாக்காத்தான் ஹராப்பான் (HARAPAN) 11 இடங்களையும், பெரிக்காத்தான் நேசனல் (PN) 7 இடங்களையும் வென்றுள்ளன.

இந்தத் தேர்தல் முடிவுகளின் மூலம், நெகிரி செம்பிலான் மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான இடங்களைக் கைப்பற்றிய கட்சியாகப் பாரிசான் நேசனல் முன்னிலை வகித்துள்ளது; அதனைத் தொடர்ந்து ஹராப்பான் மற்றும் PN கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்தத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதிபெற்ற 889,490 வாக்காளர்களில், 646,084 வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையைச் சிறப்பாக ஆற்றியுள்ளனர். இதன் வழி, மாநிலத்தின் மொத்த வாக்காளர் வருகைப் பதிவு (Voter Turnout) 72.64 விழுக்காடாகப் பதிவாகியுள்ளது.

வாக்கு எண்ணிக்கையின் போது, மொத்தம் 7,064 வாக்குச் சீட்டுகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், 643 வாக்குச் சீட்டுகள் திரும்பக் கொடுக்கப்படவில்லை என்றும் தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஹராப்பான் கூட்டணி அனைத்து 36 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. எனினும், தொகுதிப் பங்கீட்டின் அடிப்படையில் பாரிசான் நேசனல் 25 தொகுதிகளிலும், பெரிக்காத்தான் நேசனல் 11 தொகுதிகளிலும் தங்கள் வேட்பாளர்களைக் களமிறக்கிப் பலப்பரீட்சை நடத்தியிருந்தன.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.