மலாக்கா தேர்தல்: கூட்டணி குறித்து பக்காத்தான் ஹராப்பான் இன்னும் முடிவு செய்யவில்லை

30 செப்டெம்பர் 2026, 10:00 AM
மலாக்கா தேர்தல்: கூட்டணி குறித்து பக்காத்தான் ஹராப்பான் இன்னும் முடிவு செய்யவில்லை

ஷா ஆலாம், செப்.30 — மலாக்கா 16ஆவது மாநிலத் தேர்தலை எதிர்கொள்வதற்காக எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி அமைப்பது குறித்து பக்காத்தான் ஹராப்பான் (PH) இதுவரை இறுதி முடிவு எடுக்கவில்லை என அதன் தேர்தல் இயக்குநர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.

எனினும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வதற்கு முன்னர், சாத்தியமான ஒத்துழைப்புகள் மற்றும் அதற்கான வாய்ப்புகளை பக்காத்தான் ஹராப்பான் ஆராயும்.

மலாக்கா PH தரப்பின் கருத்துகளை கேட்டறிந்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கொள்கை ரீதியான முடிவை எடுப்பதற்காக அதனை மத்திய தலைமை மன்றத்தில் இறுதி செய்ய வேண்டும்.

சில தரப்புகளுடன் புரிந்துணர்வுடன் போட்டியிடுவதா அல்லது தங்களுக்கான பகுதிகளில் கவனம் செலுத்துவதா என்பது பின்னர் முடிவு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இதனிடையே, எதிர்வரும் நாட்களில் பாரிசான் நேஷனல் (BN) தரப்புடன் சந்திப்பு நடைபெறவுள்ளதாகவும், அதில் தேர்தல் ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்படும் எனவும் தமக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமிருடின் கூறினார்.

இதனிடையே, மலாக்கா 16ஆவது மாநிலத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் மலேசியத் தேர்தல் ஆணையமான SPR, அக்டோபர் 7ஆம் தேதி சிறப்புக் கூட்டத்தை நடத்தவுள்ளது.

அதில் தேர்தல் ஆணை வெளியிடப்படும் தேதி, வேட்புமனுத் தாக்கல் நாள் மற்றும் வாக்களிப்பு நாள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் பரிசீலிக்கப்படும்.

மலாக்கா மாநில சட்டமன்றம் கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து 16ஆவது மாநிலத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.