கோலாலம்பூர், ஆகஸ்ட் 1 -மலேசியாவின் சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று மாலை 7 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், பேராக், கிளந்தான், திராங்கனு, பகாங், நெகிரி செம்பிலான், ஜோகூர், சரவாக் மற்றும் சபா ஆகிய மாநிலங்களின் சில குறிப்பிட்ட பகுதிகளிலும் இந்தக் மோசமான வானிலை நிலவக்கூடும் என்று மெட்மலேசியா தெரிவித்துள்ளது.
குறிப்பாக, நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஜெலுபு மற்றும் சிரம்பான் ஆகிய மாவட்டங்களும், ஜோகூர் மாநிலத்தில் தங்காக், செகாமாட், மூவார், பத்து பஹாட், குளுவாங், மெர்சிங் மற்றும் பொந்தியான் ஆகிய மாவட்டங்களும் இந்த வானிலை எச்சரிக்கைக்குள் அடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.






