ஷா ஆலம், ஆகஸ்ட் 19 — கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையங்களில் (KLIA) கடந்த ஆகஸ்ட் 4 முதல் 17ஆம் தேதி வரை ஆறு தொடர் சோதனை நடவடிக்கைகளில் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நடவடிக்கைகளின் மூலம் போதைப்பொருட்களை விநியோகித்து வந்த ஆறு கும்பல்கள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளன.
மொத்தம் 96.151 கிலோகிராம் கஞ்சா பூக்கள், 408.637 கிலோகிராம் மெத்தாம்பெட்டமைன் (syabu), 87.984 கிலோகிராம் ஹெரோயின் பேஸ் மற்றும் 7.725 கிலோகிராம் கோகைன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் RM37.5 மில்லியன் என சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் தெரிவித்தார்.
இந்தச் சோதனை நடவடிக்கைகளில் 22 முதல் 54 வயதுக்குட்பட்ட ஏழு ஆண்கள் மற்றும் ஐந்து பெண்கள் என மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிலாங்கூர் போலீசாரின் இந்தத் தொடர் நடவடிக்கை, மாநிலத்தில் பெரிய அளவில் செயல்பட்டு வந்த போதைப்பொருள் விநியோகக் கும்பல்களுக்கு எதிரான குறிப்பிடத்தக்க வெற்றியாக அமைந்துள்ளது.






