கோலாலம்பூர், ஜூலை 31- இன்று பிற்பகல் 4 மணி வரை சிலாங்கூரில் கோலா சிலாங்கூர், உலு சிலாங்கூர், கிள்ளான் மற்றும் கோம்பாக் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேபோன்ற வானிலை எச்சரிக்கையானது மலாக்கா, பகாங் மாநிலத்தில் ரவுப் மற்றும் பெந்தோங் ஆகிய இடங்களுக்கும் விடுக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்டப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் மோசமான வானிலை குறித்து எப்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறும், வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ தளங்கள் வாயிலாக அவ்வப்போது வெளியிடப்படும் நிலவரங்களை உன்னிப்பாகக் கவனிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.





