பிலிப்பைன்ஸில் புயல், பருவமழையால் 50.8 லட்சம் பேர் பாதிப்பு

17 ஆகஸ்ட் 2026, 9:20 AM
பிலிப்பைன்ஸில் புயல், பருவமழையால் 50.8 லட்சம் பேர் பாதிப்பு

மணிலா, ஆகஸ்ட் 17 — பிலிப்பைன்ஸில் வெப்பமண்டல புயல்களான லூயிஸ் மற்றும் மேமேய் ஏற்படுத்திய தாக்கத்துடன் தென்மேற்கு பருவமழையும் இணைந்துள்ள நிலையில், 10 பகுதிகளில் சுமார் 50.8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது சுமார் 523 தற்காலிக நிவாரண மையங்களில் 7,182 குடும்பங்களைச் சேர்ந்த 24,893 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ள நிவாரண உதவிகளின் மொத்த மதிப்பு சுமார் RM48.6 மில்லியனுக்கு சமமாகும்.

மேலும், 17 பேர் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் தொடர்ந்து காணாமல் போயிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புயல் மற்றும் பருவமழையின் தாக்கத்தால் மொத்தம் 182 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.

தொடர்ந்து நிலவும் மோசமான வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.