இஸ்தான்புல், ஜூலை 31 - பிரிட்டனில் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் ஏற்பட்ட கடுமையான வெப்ப அலை காரணமாக, இதுவரை இல்லாத அளவுக்கு 2,877 பேர் உயிரிழந்துள்ளதாகப் பிரிட்டன் சுகாதாரப் பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது.
இது கடந்த 2025-ஆம் ஆண்டு முழுவதிலும் பதிவான 1,504 இறப்புகளுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட இரு மடங்காகும். இந்தத் தகவல் ஒட்டுமொத்த உலக நாடுகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தத் தரவுகள் தற்போதைக்கு தற்காலிகமானவை என்றாலும், கடந்த 2022-ஆம் ஆண்டு பிரிட்டன் சுகாதாரப் பாதுகாப்பு முகமை பதிவு செய்த வருடாந்திர இறப்பு எண்ணிக்கையை இந்தச் சம்பவங்கள் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
ஜூன் மாதத்தில் எட்டு நாட்கள் நீடித்த வெப்ப அலையின் காரணமாக இங்கிலாந்தில் இரண்டாவது முறையாக மிக உயர்ந்த சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இது அந்தப் பகுதியில் நிலவிய வழக்கத்திற்கு மாறான வெப்பநிலையைப் பிரதிபலிப்பதாகக் கூறப்படுகிறது.
வெப்பநிலை மக்களின் உடல்நலத்திற்கும் நல்வாழ்வுக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் போது முன்கூட்டியே எச்சரிக்கும் வகையில், வானிலை ஆய்வு மையத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும் வெப்ப சுகாதார எச்சரிக்கை அமைப்பின் முக்கியத்துவத்தை இந்த நிகழ்வுகள் உணர்த்துவதாக முகமை குறிப்பிட்டுள்ளது.






