கோலாலம்பூர், ஜூலை 29 - சிலாங்கூர் மாநிலத்தின் நான்கு முக்கிய மாவட்டங்களில் இன்று பிற்பகல் மூன்று மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்ம மலேசியா அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது.
சிலாங்கூரில் சபாக் பெர்ணம், கோலா சிலாங்கூர், கோலா லங்காட் மற்றும் செப்பாங் ஆகிய மாவட்டங்கள் இந்த மோசமான வானிலையினால் பாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அவசர எச்சரிக்கையானது பெர்லிஸ், கெடா, பினாங், மலாக்கா ஆகிய முழு மாநிலங்களையும் மற்றும் பேராக், பகாங், நெகிரி செம்பிலான், ஜோகூர் ஆகிய மாநிலங்களின் சில குறிப்பிட்ட பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது.
இது ஒரு குறுகிய கால எச்சரிக்கையாகும். ஒவ்வொரு முறை வெளியிடப்படும் பொழுதும் இது அதிகபட்சமாக ஆறு மணி நேரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, பொதுமக்கள் அனைவரும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.





