கோலாலம்பூர், ஜூலை 27 - கிள்ளான் பள்ளத்தாக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மமலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள பல முக்கியப் பகுதிகளில் இந்த மோசமான வானிலை இன்று மாலை 7 மணி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சிலாங்கூர் மாநிலத்தில் சபாக் பெர்ணம், கோலா சிலாங்கூர், உலு சிலாங்கூர், கோம்பாக் மற்றும் உலு லாங்கட் ஆகிய மாவட்டங்கள் இந்த வானிலை மாற்றத்தினால் நேரடியாகப் பாதிக்கப்படலாம் என அடையாளம் காணப்பட்டுள்ளன.
பேராக், பகாங், கோலாலம்பூர், நெகிரி செம்பிலான், ஜொகூர் மற்றும் சபா மாநிலங்களின் சில குறிப்பிட்ட பகுதிகளிலும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் வானிலை மாற்றங்களைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.







