சிலாங்கூர் உட்பட 5 மாநிலங்களில் கனமழை - மெட்மலேசியா அறிவிப்பு

27 ஜூலை 2026, 2:56 AM
சிலாங்கூர் உட்பட 5 மாநிலங்களில் கனமழை - மெட்மலேசியா அறிவிப்பு

ஷா ஆலாம், ஜூலை 27: சிலாங்கூரின் சபாக் பெர்ணம் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழை, கனமழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட் மலேசியா) எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இந்த வானிலை முன்னறிவிப்பு இன்று பிற்பகல் 1 மணி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பேராக், சரவாக், சபா மற்றும் லாபுவான் கூட்டாட்சிப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளிலும் இதேபோன்ற வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் மெட் மலேசியாவின் அதிகாரப்பூர்வ மற்றும் தகவல் தொடர்பு தளங்கள் மூலமாக தற்போதைய வானிலை நிலவரங்களைத் தொடர்ந்து அறிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், இந்த அவசரகால எச்சரிக்கை அமலில் இருக்கும் காலகட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.