போதைப்பொருள் மறுவாழ்வு மையத்திலிருந்து தப்பிய இருவர் மீண்டும் கைது

30 ஆகஸ்ட் 2026, 2:18 PM
போதைப்பொருள் மறுவாழ்வு மையத்திலிருந்து தப்பிய இருவர் மீண்டும் கைது

ஷா ஆலம், ஆகஸ்ட் 30: டெங்கில் போதைப்பொருள் மறுவாழ்வு மையமான புஸ்பென் (PUSPEN) நிலையத்திலிருந்து அண்மையில் தப்பிச் சென்ற இருவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தப்பிச் சென்ற இருவரும் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டதாகத் தேசிய போதைப்பொருள் தடுப்பு முகமையின் (AADK) தலைமை இயக்குநர் டத்தோ ருஸ்லின் ஜுசோஹ் தெரிவித்தார்.

இருவரும் மீண்டும் டெங்கில் புஸ்பென் மறுவாழ்வு மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

விரைவில் அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இருவரும் காணாமல் போனது தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.