ஷா ஆலாம், ஜூலை 23 — சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் பிற மாநிலங்களில் இன்று பிற்பகல் 3 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிலாங்கூரில் கோலா சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக், பெட்டாலிங், கோலா லங்காட், உலு லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய ஏழு மாவட்டங்கள் இதனால் பாதிக்கப்படலாம் என அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பினாங்கு, மலாக்கா, பகாங், பேராக், நெகிரி செம்பிலான், ஜோகூர் மற்றும் கெடா ஆகிய மாநிலங்களிலும் இந்த மோசமான வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.







