கோலாலம்பூர், ஜூலை 22 - சிலாங்கூர் மாநிலத்தின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 3 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிலாங்கூரில் சபாக் பெர்ணம், கோலா சிலாங்கூர், உலு சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக் மற்றும் பெட்டாலிங் ஆகிய மாவட்டங்கள் இதனால் பாதிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்ற மோசமான வானிலை பேராக் மாநிலத்தின் உலு பேராக், கோலா கங்சார், மஞ்சோங், கிந்தா, பேராக் தெங்கா, கம்பார், பாகான் டத்தோ, ஹிலிர் பேராக், பாத்தாங் பாடாங் மற்றும் முவாலிம் ஆகிய பகுதிகளிலும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், கூட்டரசு பிரதேசமான கோலாலம்பூர் மற்றும் ஜோகூர் மாநிலத்தின் மெர்சிங், கோத்தா திங்கி, ஜோகூர் பாரு ஆகிய இடங்களிலும் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சபா மாநிலத்தைப் பொறுத்தவரையில், கரையோரப் பகுதிகளான பாப்பார், புத்தாத்தான், பெனாம்பாங், கோத்தா கினபாலு, துவாரான், கோத்தா பெலுட் மற்றும் கூடாட் ஆகிய மாவட்டங்களுக்கும் இந்த வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்தகைய எச்சரிக்கையானது குறுகிய கால அறிவிப்பாகும் என்றும், இது வெளியிடப்பட்ட நேரத்தில் இருந்து அதிகபட்சமாக ஆறு மணி நேரம் மட்டுமே செல்லுபடியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






