ஷா ஆலாம், ஜூலை 22 — மலேசியாவில் ஆறு மாநிலங்களில் இன்று காலை 11 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கெடாவில் குபாங் பாசு, கோத்தா சேதார், போக்கோக் சேனா, இயான், பெண்டாங், கோலா மூடா, குலிம் மற்றும் பண்டார் பாரு ஆகிய பகுதிகள் இதில் அடங்கும் என மெட்மலேசியா தெரிவித்துள்ளது.
இதேபோன்ற எச்சரிக்கை பினாங்கு மாநிலம் முழுமைக்கும், பேராக் மாநிலத்தில் கெரியான் மற்றும் லாரூட், மாத்தாங், செலாமா ஆகிய மாவட்டங்களுக்கும் விடுக்கப்பட்டுள்ளது.
பகாங் மாநிலத்தில் ரொம்பின் பகுதியிலும், ஜோகூர் மாநிலத்தில் தங்காக், செகாமட், மூவார், பத்து பஹாட், பொந்தியான் மற்றும் ஜோகூர் பாரு ஆகிய பகுதிகளிலும் மோசமான வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.
சபாவில் சண்டக்கான் பிரிவில் உள்ள தெலுபிட், பெலூரான், சண்டக்கான் மற்றும் கூடாட் பிரிவில் உள்ள பித்தாஸ், கூடாட் ஆகிய பகுதிகள் இதனால் பாதிக்கப்படலாம்.
இது அதிகபட்சமாக ஆறு மணி நேரத்திற்கு மிகாமல் செல்லுபடியாகும் குறுகிய கால வானிலை எச்சரிக்கையாகும்," என்று மெட்மலேசியா இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எச்சரிக்கை அமுலில் இருக்கும் காலக்கட்டத்தில் கனமழை, இடி மின்னல் மற்றும் சூறாவளிக் காற்று வீசக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதால், சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.






