ஷா ஆலாம், ஜூலை 21 — சிலாங்கூரில் உள்ள பல பகுதிகளில் இன்று மாலை 6 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிலாங்கூரில் சபாக் பெர்ணம், கோலா சிலாங்கூர், உலு சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக், பெட்டாலிங் மற்றும் உலு லங்காட் ஆகிய பகுதிகள் இதனால் பாதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்ற எச்சரிக்கை பெர்லிஸ், கெடா, பேராக், கிளாந்தான், திராங்கானு, பகாங், நெகிரி செம்பிலான், ஜோகூர், கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசம், சரவாக் மற்றும் சபா ஆகிய மாநிலங்களில் உள்ள சில பகுதிகளுக்கும் விடுக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை அமுலில் இருக்கும் காலக்கட்டத்தில் கனமழை, இடி மின்னல் மற்றும் சூறாவளிக் காற்று வீசக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதால், சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.






