கோலாலம்பூர், ஜூலை 19 - மலேசியாவின் 10 மாநிலங்கள் மற்றும் மூன்று கூட்டாட்சிப் பிரதேசங்களில் இன்று மாலை 5.00 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த மோசமான வானிலை எச்சரிக்கையின் கீழ் பெர்லிஸ், கெடா, பேராக், பகாங், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜோகூர், சரவாக் மற்றும் சபா ஆகிய மாநிலங்களுடன் கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் லபுவான் ஆகிய கூட்டாட்சிப் பிரதேசங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
சிலாங்கூர் மாநிலத்தில் கோலா சிலாங்கூர், உலு சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக், பெட்டாலிங், கோலா லங்காட், உலு லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய அனைத்து முக்கிய மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த எச்சரிக்கை காலக்கட்டத்தில் தேவையற்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, பொதுமக்கள் அனைவரும் தற்போதைய வானிலை மாற்றங்களைத் தொடர்ந்து கண்காணித்து வருமாறும், அதிகாரிகளின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை முறையாகப் பின்பற்றி நடக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.







