கோலாலம்பூர், ஜூலை 14 – பெர்லிஸ், பினாங்கு மற்றும் கெடா ஆகிய மூன்று வட மாநிலங்களில் இன்று பிற்பகல் 1.00 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (METMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று காலை 9.00 மணியளவில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையின்படி, இந்த மோசமான வானிலை பெர்லிஸ் மற்றும் பினாங்கு மாநிலங்களின் அனைத்துப் பகுதிகளிலும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், கெடா மாநிலத்தில் லங்காவி, குபாங் பாசு, கோத்தா ஸ்டார், பொக்கோக் செனா, யான், பெண்டாங் மற்றும் கோலா மூடா ஆகிய பகுதிகளில் இதே போன்ற வானிலை நிலவக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 20 மில்லிமீட்டருக்கும் (mm/jam) அதிகமான மழைப்பொழிவோடு, இடியுடன் கூடிய மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் தென்படும் போது இந்த எச்சரிக்கை விடுக்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.







