சிலாங்கூரில் 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை - மெட்மலேசியா

13 ஜூலை 2026, 7:39 AM
சிலாங்கூரில் 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை - மெட்மலேசியா

ஷா ஆலாம், 13 ஜூலை – சிலாங்கூரில் உள்ள சபாக் பெர்ணம், கோலா சிலாங்கூர், உலு சிலாங்கூர், கோம்பாக் மற்றும் உலு லங்காட் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மாலை 5 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) எச்சரித்துள்ளது.

தலைநகர் கோலாலம்பூர் தவிர, கெடா, பேராக், பகாங், நெகிரி செம்பிலான் மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களின் சில மாவட்டங்களிலும் இதே போன்ற வானிலை நிலவக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழைக்கான இந்த எச்சரிக்கை, வெளியிடப்பட்ட நேரத்திலிருந்து அதிகபட்சம் ஆறு மணிநேரம் மட்டுமே செல்லுபடியாகும் ஒரு குறுகிய கால எச்சரிக்கையாகும்.

பொதுமக்கள் இதுகுறித்த புதிய மற்றும் நம்பகமான தகவல்களைப் பெற www.met.gov.my என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளம், சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் 'myCuaca' செயலியைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.