கோலாலம்பூர், ஜூலை 7 - ஆறு மாநிலங்கள் மற்றும் லபுவான் கூட்டரசுப் பிரதேசத்தில் இன்று மதியம் 12 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.
தீபகற்ப மலேசியாவில் பேராக் மாநிலத்தின் பாகான் டத்தோ மற்றும் ஹிலிர் பேராக் பகுதிகளும், சிலாங்கூரில் சபாக் பெர்ணம் மற்றும் கோலா சிலாங்கூர் பகுதிகளும் பாதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நெகிரி செம்பிலான் மாநிலத்தின் போர்ட்டிக்சன் பகுதியிலும், மலாக்கா மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இந்த மோசமான வானிலை நிலவக்கூடும்.
அதேவேளையில், கிழக்கு மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் உள்ள சிபு (செலங்காவ்), முக்கா, காபிட் மற்றும் பிந்துலு ஆகிய இடங்களிலும், சபா மாநிலத்தின் உட்பகுதிகளான கோலா பென்யூ, பியூஃபோர்ட், தாவாவ் மற்றும் சண்டாக்கான் (கினபதாங்கான், சண்டாக்கான்) ஆகிய பகுதிகளிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதனுடன் லபுவான் கூட்டரசுப் பிரதேசம் முழுமையாகவும் இந்த வானிலை எச்சரிக்கைக்குள் உட்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுமாறும், அவசியமின்றி வெளியில் செல்வதைத் தவிர்த்து பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.







