கோலாலம்பூர், ஜூலை 7 - சிலாங்கூர் மாநிலத்தின் ஏழு மாவட்டங்கள் உட்பட மலேசியாவின் பல மாநிலங்களில் இன்று மாலை 6 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யகூடும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிலாங்கூரில் சபா பெர்ணம், கோலா சிலாங்கூர், உலு சிலாங்கூர், கோம்பாக், பெட்டாலிங், உலு லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய மாவட்டங்கள் இந்த மோசமான வானிலையால் பாதிக்கப்படலாம்.
இதே எச்சரிக்கை கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா கூட்டரசுப் பிரதேசங்களுக்கும் விடுக்கப்பட்டுள்ளது. தீபகற்ப மலேசியாவில் ஜோகூர், நெகிரி செம்பிலான், பேராக் கிளந்தான் திரங்கானு மற்றும் பகாங் ஆகிய மாநிலங்களின் பல பகுதிகளிலும் பலத்த மழை பெய்யக்கூடும்.
மேலும், கிழக்கு மலேசியாவில் சரவாக், சபா மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் இந்த அவசர வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வேலை முடிந்து வீடு திரும்புவோர் மற்றும் வாகன ஓட்டிகள் அனைவரும் சாலைகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.







