ஹார்முஸ் நீரிணையில் பதற்றம்: மலேசியாவின் எரிபொருள் விநியோகம் சீராக உள்ளதாக துணைப் பிரதமர் உறுதி

13 ஜூலை 2026, 2:00 AM
ஹார்முஸ் நீரிணையில் பதற்றம்: மலேசியாவின் எரிபொருள் விநியோகம் சீராக உள்ளதாக துணைப் பிரதமர் உறுதி

கூச்சிங், 13 ஜூலை – ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) நிலவி வரும் பதற்றமான சூழலை அரசாங்கம் மிக உன்னிப்பாகக் கண்காணித்து வருதோடு தற்போதைக்கு மலேசியாவின் எரிபொருள் விநியோகம் சீராக உள்ளதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபாடிலா யூசோப் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் எரிசக்தி விநியோகத் தட்டுப்பாடு எதுவும் ஏற்படவில்லை என்று குறிப்பிட்ட அவர், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்காகப் பெட்ரோனாஸ் நிறுவனமும், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் பலதரப்பு பேச்சுவார்த்தைகள் மூலம் தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் கூறினார்.

உள்நாட்டில் எரிபொருள் இருப்பு போதுமானதாக இருந்தாலும், உலகளாவிய புவிசார் அரசியல் நகர்வுகளும், உலக சந்தையில் எண்ணெய் மற்றும் எரிவாயு விலையில் நிலவும் நிச்சயமற்ற தன்மையும் நாட்டின் பொருளாதாரத்தில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.

இந்தச் சூழல், அரசாங்கம் வழங்கி வரும் மானியங்கள் மற்றும் உதவித் திட்டங்களுக்கு மத்தியில் நாட்டின் நிதிநிலைக்குக் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

எனவே, மக்களுக்கு வழங்கும் ஆதரவிற்கும் உதவிகளுக்கும் முன்னுரிமை அளிக்கும் அதே வேளையில், நாட்டின் நிதி நிலைத்தன்மையைத் திட்டமிடுவதே தங்களின் தற்போதைய முக்கிய சவாலாகும் என்று துணைப் பிரதமர் குறிப்பிட்டார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.