கடைசி நிமிடத்தில் மெரினோ அடித்த அதிரடி கோலால் பெல்ஜியத்தை வீழ்த்தியது ஸ்பெயின்!

11 ஜூலை 2026, 2:48 AM
கடைசி நிமிடத்தில் மெரினோ அடித்த அதிரடி கோலால் பெல்ஜியத்தை வீழ்த்தியது ஸ்பெயின்!

லாஸ் ஏஞ்சலஸ், ஜூலை 11 -2026 உலகக் கிண்ணப் போட்டியிலிருந்து பெல்ஜியம்மை வெளியேற்றியிருக்கிறது ஸ்பெயின்.

மிகேல் மெரினோ ஸ்பெயினுக்கான மீண்டும் ஒரு தாமதமான வெற்றி கோலை அடித்து, பிரான்ஸ் அணிக்கு எதிரான விறுவிறுப்பான அரையிறுதிப் போட்டிக்கு உறுதிச் செய்தார்.

பெல்ஜியம் அணியின் முதன்மை கோல்காவலர் திபாத் கோர்டோயிஸ் காயமடைந்ததால், அவருக்குப் பதிலாக சென்னே லாம்மென்ஸ் களமிறங்கினார்.

அவர் களமிறங்கிய சில நிமிடங்களிலேயே, ஸ்பெயின் அடித்த ஒரு சாதாரண கோலடிக்கும் முயற்சியைத் தடுக்கத் தவறினார்.

அதைச் சாதகமாக்கிக் கொண்ட மெரினோ பந்தைக் கோல் கம்பத்திற்குள் புகுத்தினார்.

இதற்கு முன்னதாக, ஃபேபியன் ரூயிஸ் ஸ்பெயினுக்கான முதல் கோலை அடித்து ஆட்டத்தைத் தொடங்கினார்.

ஆனால் முற்பாதி முடிவுறுவதற்குள் பெல்ஜியம் அணியின் சார்லஸ் டி கெட்டேலேரே கோல் அடித்து ஆட்டத்தைச் சமப்படுத்தினார்.

2010 உலகக் கிண்ண வெற்றிக்குப் பிறகு, முதன்முறையாக மீண்டும் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறும் நோக்கில் ஸ்பெயின் அணி, ஜூலை 14-ஆம் தேதி, டல்லாஸ் நகரில் பிரான்ஸ்சை எதிர்கொள்கிறது.

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.