சுவிட்சர்லாந்தை வீழ்த்தியது அர்ஜென்டினா: அரையிறுதியில் இங்கிலாந்துடன் மோதல் !

12 ஜூலை 2026, 5:53 AM
சுவிட்சர்லாந்தை வீழ்த்தியது அர்ஜென்டினா: அரையிறுதியில் இங்கிலாந்துடன் மோதல் !
சுவிட்சர்லாந்தை வீழ்த்தியது அர்ஜென்டினா: அரையிறுதியில் இங்கிலாந்துடன் மோதல் !
சுவிட்சர்லாந்தை வீழ்த்தியது அர்ஜென்டினா: அரையிறுதியில் இங்கிலாந்துடன் மோதல் !

கேன்சாஸ் சிட்டி, ஜூலை 12 - கூடுதல் நேரத்தில் ஜூலியன் ஆல்வாரெஸ் அடித்த கோலின் மூலம், 10 வீரர்களுடன் போராடிய சுவிட்சர்லாந்தை 3-1 என்ற கோல் எண்ணிக்கையில் வீழ்த்தியது அர்ஜென்டினா.

இதன் மூலம் 2026 உலகக் கிண்ணப் போட்டியின் அரையிறுதியில் இங்கிலாந்துடன் மோதும் வாய்ப்பை அர்ஜென்டினா உறுதி செய்துள்ளது .

முன்னதாக ஆட்டம் தொடங்கிய 10-வது நிமிடத்தில், கேப்டன் லியோனல் மெஸ்ஸி ஏற்படுத்தி தந்த அருமையான வாய்ப்பினைப் பயன்படுத்தி, அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் முதல் கோலை அடித்து அணியை முன்னிலையில் வைத்தார்.

எனினும், ஆட்டத்தின் பிற்பாதியில் சுவிட்சர்லாந்தின் டான் ண்டோய் ஒரு கோல் அடித்து ஆட்டத்தைச் சமப்படுத்தினார்.

ஆனால், அடுத்த 5 நிமிடங்களில் சுவிட்சர்லாந்து அணிக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

ஏற்கனவே மஞ்சள் அட்டை பெற்றிருந்த பிரீல் எம்போலோ, பெனால்டி வாங்குவதற்காகத் தவறி விழுந்து ஏமாற்ற முயன்றதால் இரண்டாவது மஞ்சள் அட்டையுடன் சிவப்பு அட்டை பெற்று திடலை விட்டு வெளியேற்றப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து ஆட்டம் கூடுதல் நேரத்திற்குச் சென்றது. 10 வீரர்களுடன் சுவிட்சர்லாந்து தனது தற்காப்பு அரணை வலுப்படுத்தி விளையாடிய போதிலும், 112-வது நிமிடத்தில் ஜூலியன் ஆல்வாரெஸ் உதைத்த பந்து வளைந்து சென்று கோல் கம்பத்தின் மேல் மூலையில் புகுந்தது.

ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் லாடாரோ மார்டினெஸ் அர்ஜென்டினாவின் 3-வது கோலை அடித்து வெற்றியை உறுதி செய்தார் .

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.