ஷா ஆலம், ஜூன் 25: சிலாங்கூர் மாநிலத்தின் மூன்று முக்கிய மாவட்டங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளில் இன்று இரவு 8.00 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிலாங்கூரில் உலு சிலாங்கூர், கோம்பாக் மற்றும் பெட்டாலிங் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு இந்த மோசமான வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதே வானிலை ஒட்டுமொத்த கோலாலம்பூரிலும் நிலவக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பிற மாநிலங்களான பெர்லிஸ், கெடா, பேராக், திரங்கானு, பகாங், ஜோகூர், சரவாக் மற்றும் சபா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளிலும் இந்த மோசமான வானிலை பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த எச்சரிக்கையானது ஒரு முறை வெளியிடப்பட்டால் அதிகபட்சமாக ஆறு மணி நேரம் வரை மட்டுமே செல்லுபடியாகும் ஒரு குறுகிய கால வானிலை எச்சரிக்கை நடவடிக்கை ஆகும்.






