எட்டு மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை

4 ஜூலை 2026, 8:56 AM
எட்டு மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை

கோலாலம்பூர், ஜூலை 4: இன்று மாலை 6:00 மணி வரை சபா மற்றும் சரவாக் உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.

கெடா மாநிலத்தில் கோத்தா ஸ்டார், யான், பெண்டாங், கோலா மூடா மற்றும் சிக் ஆகிய மாவட்டங்களிலும்; பேராக் மாநிலத்தில் மாஞ்சோங் மற்றும் பேராக் தெங்கா ஆகிய பகுதிகளிலும், திராங்கானுவின் கெமாமன்னிலும் இந்த மோசமான வானிலை நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை பகாங்கின் குவாந்தான், சிலாங்கூரின் உலு லங்காட் மற்றும் நெகிரி செம்பிலானின் ஜெலுபு மற்றும் சிரம்பான் ஆகிய பகுதிகளுக்கும் விடுக்கப்பட்டுள்ளது.

சரவாக் மாநிலத்தில் சரிக்கே (சிபு) மற்றும் முக்கா (தஞ்சோங் மானிஸ் மற்றும் தாரோ) ஆகிய பகுதிகள் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் வேளையில், சபாவில் உட்பகுதி (கெனிங்காவ் மற்றும் தம்புனான்), மேற்கு கடற்கரை (பாப்பார் மற்றும் பெனாம்பாங்) மற்றும் சாண்டாக்கான் (கினாபாடாங்கான்) ஆகிய பகுதிகள் இந்த வானிலை எச்சரிக்கைக்கு உட்பட்டுள்ளன என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.