சிலாங்கூரின் 4 மாவட்டங்களில் கனமழை: மெட்மலேசியா எச்சரிக்கை

25 ஜூன் 2026, 8:47 AM
சிலாங்கூரின் 4 மாவட்டங்களில் கனமழை: மெட்மலேசியா எச்சரிக்கை

ஷா ஆலம், ஜூன் 25: சிலாங்கூர் மாநிலத்தின் நான்கு முக்கிய மாவட்டங்கள் உட்படப் பல பகுதிகளில் இன்று மாலை 6.00 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிலாங்கூரில் கோம்பாக், பெட்டாலிங், உலு லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய மாவட்டங்கள் இந்த மோசமான வானிலை எச்சரிக்கை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மெட்மலேசியா தெரிவித்துள்ளது.

இதே போன்ற வானிலை கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் நிலவக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

சிலாங்கூர் தவிர்த்து, நாட்டின் பிற மாநிலங்களான பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக், திரங்கானு, நெகிரி செம்பிலான், ஜோகூர் மற்றும் சரவாக் மாநிலத்தின் சில பகுதிகளிலும் இந்த மோசமான வானிலை பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த எச்சரிக்கையானது ஒரு முறை வெளியிடப்பட்டால் அதிகபட்சமாக ஆறு மணி நேரம் வரை மட்டுமே செல்லுபடியாகும் ஒரு குறுகிய கால வானிலை எச்சரிக்கை நடவடிக்கை ஆகும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.