பள்ளியில் கத்திக் குத்து சம்பவம்; காயமடைந்த மாணவி மருத்துவமனையில் அனுமதி

6 ஜூலை 2026, 8:02 AM
பள்ளியில் கத்திக் குத்து சம்பவம்; காயமடைந்த மாணவி மருத்துவமனையில் அனுமதி

பந்திங், ஜூலை 6 - சிலாங்கூரில் உள்ள ஓர் இடைநிலைப் பள்ளியில் மாணவி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்த சம்பவத்தை சிலாங்கூர் மாநிலக் கல்வித் துறை (JPNS) அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

காயமடைந்த அந்த மாணவி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் காவல்துறையினர் சந்தேக நபரை உடனடியாகக் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவிக்கு மிகச் சிறந்த மருத்துவச் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வதே தங்களின் தற்போதைய முக்கிய நோக்கம் என்றும், அவரது குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் கல்வித் துறை தெரிவித்தது.

மேலும், இக்கோரச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்துள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளிப் பணியாளர்களுக்கு மனநல ரீதியான ஆதரவையும் ஆலோசனைகளையும் வழங்குவதற்காக, ஆலோசகர்கள் குழு (counsellors) ஒன்று அந்தப் பள்ளிக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில், பொதுமக்கள் யாரும் சமூக வலைத்தளங்களில் வதந்திகளைப் பரப்பவோ அல்லது உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவோ வேண்டாம் என்று சிலாங்கூர் மாநிலக் கல்வித் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.