புத்ராஜெயா, மே 29 - கல்வி அமைச்சின் (KPM) கீழ் பயிலும் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்குப் புத்தக வவுச்சர்கள் வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த இந்த முன்னெடுப்பு தொடர்பான விவரங்கள் தற்போது தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இன்று வெளியிட்ட அறிக்கையில் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
"மாணவர்களின் மொழிப்புலமை மற்றும் அறிவாற்றலை மேம்படுத்தும் வகையில், வாசிப்புப் பழக்கத்தை அவர்களிடையே முன்னுரிமையாக மாற்றும் கல்வி அமைச்சின் முயற்சிக்கு இந்த முன்னெடுப்பு மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது," என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, 2026-ஆம் ஆண்டுக்கான கோலாலம்பூர் அனைத்துலகப் புத்தக விழாவை (PBAKL) தொடக்கி வைத்தபோது, கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் இடைநிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் பொது உயர்கல்வி நிலையங்களில் (IPTA) பயிலும் மாணவர்களுக்கு RM100 மதிப்புள்ள புத்தக வவுச்சர்கள் வழங்கப்படும் எனப் பிரதமர் அறிவித்திருந்தார்.
இந்த ஆண்டுக்கான இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுவதாகவும், இன்று தொடங்கி ஜூன் 7-ஆம் தேதி வரை கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் (WTCKL) 10 நாட்கள் நடைபெறும் PBAKL 2026 புத்தக விழாவில் இந்த வவுச்சர்களை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அவர் கூறியிருந்தார்.
இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கான புத்தக வவுச்சர் விநியோகம் விரைவில் செயல்படுத்தப்படும் - கல்வி அமைச்சு
29 மே 2026, 9:16 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
மாணவர்களுக்கு 100 ரிங்கிட் புத்தக வவுச்சர் வழங்கப்படும் - பிரதமர் அன்வார் அறிவிப்பு
Shalini Rajamogun
29 மே 2026

national
பள்ளியில் கத்திக் குத்து சம்பவம்; காயமடைந்த மாணவி மருத்துவமனையில் அனுமதி
Shalini Rajamogun
6 ஜூலை 2026

selangor
புகைமூட்டம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் இருக்க பெற்றோருக்கு அனுமதி: கல்வி அமைச்சர்
Bernama
7 செப்டெம்பர் 2026

selangor
1,200க்கும் மேற்பட்ட மாணவர் ஒழுங்கீனச் சம்பவங்கள்; பள்ளி பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
Nur Aishah Mohd Amin
3 செப்டெம்பர் 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



