ஷா ஆலம், ஜூன் 24: சிலாங்கூர், கெடா, பினாங்கு, கிளந்தான், திரங்கானு, பகாங், ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் இன்று மாலை 4.00 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தில் சபாக் பெர்ணம், கோலா சிலாங்கூர், உலு சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக் மற்றும் பெட்டாலிங் ஆகிய மாவட்டங்களில் இந்த மோசமான வானிலை நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்ற வானிலை பினாங்கு, பேராக், கோலாலம்பூர் மற்றும் மலாக்கா மாநிலம் முழுவதிலும் எதிர்பார்க்கப்படுகிறது.
கெடா மாநிலத்தில் குபாங் பாசு, கோத்தா ஸ்டார், போக்கோக் செனா, பாடாங் தெராப், யான், பெண்டாங், கோலா மூடா, சிக், பாலிங், கூலிம் மற்றும் பண்டார் பாரு ஆகிய பகுதிகள் இதனால் பாதிக்கப்படலாம்.
அதே வேளையில், கிளந்தானில் ஜெலி மற்றும் கோலா கிராய் ஆகிய இடங்களிலும்; திரங்கானுவில் பெசுட், செதியூ, கோலா நெருஸ், உலு திரங்கானு, கோலா திரங்கானு, மாராங் மற்றும் டுங்குன் ஆகிய மாவட்டங்களிலும்; பகாங்கில் கேமரன் மலை, ஜெராண்டுட், மாரான், குவாந்தான் மற்றும் ரோம்பின் ஆகிய பகுதிகளிலும் பலத்த மழை பெய்யக்கூடும்.
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஜெலுபு, சிரம்பான், கோலா பிலா, ரெம்பாவ், ஜெம்போல் மற்றும் தம்பின் ஆகிய இடங்களும்; ஜோகூர் மாநிலத்தில் செகாமாட், பத்து பகாட், பொந்தியான், கூலாய், கோத்தா திங்கி மற்றும் ஜோகூர் பாரு ஆகிய பகுதிகளும் இந்த எச்சரிக்கை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லி மீட்டருக்கும் (mm/jam) அதிகமாகப் பலத்த மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்படும் போது அல்லது அத்தகைய வானிலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் போதும் மட்டுமே இந்த வானிலை எச்சரிக்கை விடுக்கப்படும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் விளக்கியுள்ளது.
எனவே, பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான மிகச் சரியான மற்றும் அண்மைக்கால வானிலை தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள www.met.gov.my என்ற அதிகாரப்பூர்வ இணையப்பக்கத்தை நாடலாம்.






