பத்து பாஹாட், ஜூலை 4: தேசிய டிஜிட்டல் உள்கட்டமைப்புத் திட்டமான 'ஜெண்டேலா' (JENDELA) திட்டத்தின் கீழ், அடுத்த ஆண்டுக்குள் நாடு முழுவதும் மக்கள் வாழும் பகுதிகளில் 100 விழுக்காடு இணைய வசதியை வழங்குவதை அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளது எனத் தகவல் தொடர்பு அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ அப்துல் ஹாலிம் ஹம்சா தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 31ஆம் தேதி வரையிலான கணக்கெடுப்பின்படி, மக்கள் வசிக்கும் பகுதிகளில் அகன்ற அலைவரிசை (Broadband) சேவை 99.71 விழுக்காட்டை எட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த ஜெண்டேலா திட்டம் தொடங்குவதற்கு முன்பாக, நாடு தழுவிய அளவில் இணைய வசதி சுமார் 90 விழுக்காடாக மட்டுமே இருந்தது. தற்போது தங்களின் அடுத்தகட்டமாக 4G மற்றும் 5G இணையச் சேவைகளை வழங்குவதில் ஆணையம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
அமைச்சும் பல்லூடக ஆணையமும் இணைந்து 4G சேவையை மேலும் விரிவுபடுத்துவதோடு, கிராமப்புறங்கள் உட்பட அனைத்துப் பகுதிகளிலும் 5G சேவையை வலுப்படுத்தும் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும்.
இத்திட்டமானது தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இடையிலான உள்கட்டமைப்புப் பகிர்வு மற்றும் கூட்டு ஒத்துழைப்பின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இம்முறையின் வாயிலாக இணையச் சேவை விரிவாக்கத்தை விரைவுபடுத்தி, பயனர்களுக்கான சேவைத் தரத்தை மேம்படுத்த முடியும்.







