'பூடி மடாணி டீசல்' திட்டம்: அமல்படுத்தப்பட்ட 3 நாட்களில் 2 லட்சம் வாகன உரிமையாளர்கள் பயன்

4 ஜூலை 2026, 3:11 AM
'பூடி மடாணி டீசல்' திட்டம்: அமல்படுத்தப்பட்ட 3 நாட்களில் 2 லட்சம் வாகன உரிமையாளர்கள் பயன்

புத்ராஜெயா, ஜூலை 4: 'பூடி மடாணி டீசல்' (BUDI MADANI Diesel) திட்டம் அமல்படுத்தப்பட்ட முதல் மூன்று நாட்களிலேயே சுமார் 2 லட்சம் தனிநபர் டீசல் வாகன உரிமையாளர்கள் பயனடைந்துள்ளதாக நிதியமைச்சின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ ஜோஹான் மஹ்மூட் மெரிக்கான் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தின் கீழ் தனிநபர்களுக்கு மைக்காட் (MyKad) மூலமும், வணிகத் துறையினருக்கு 'பிளீட் கார்டு' (Fleet Card) மூலமும் மானியங்கள் வழங்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் செயல்படுத்தப்பட்ட இலக்கு நோக்கிய மானியத் திட்டங்கள் போலவே, இதிலும் அணுகல் முறையில் சில சிறிய தொழில்நுட்பத் தடங்கல்கள் மட்டுமே ஏற்பட்டதாகவும், ஒட்டுமொத்தமாக இதன் அமலாக்கம் மிகச் சீராக நடைபெற்றுள்ளது.

இதுவரை மைக்காட் அல்லது பிளீட் கார்டு பயன்பாட்டில் பெரிய அளவிலான புகார்களோ அல்லது கடுமையான பாதிப்புகளோ எழவில்லை.

இந்தத் திட்டம் தொடர்பான கூடுதல் தகவல்கள் பெறவும் அல்லது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும் பொதுமக்கள், அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தின் வாயிலாக வழிகாட்டல்களைப் பெறலாம்.

அரசாங்கம் கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் ஒரு லிட்டர் டீசல் விலையை RM2.10 ஆக நிர்ணயித்து இந்த 'பூடி டீசல்' திட்டத்தை அமல்படுத்தியது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.