மலேசிய ஏடிஎம் இயந்திரங்களில் 1 ரிங்கிட் கட்டண விலக்கு இன்று முதல் அமல்

1 ஜூலை 2026, 1:24 AM
மலேசிய ஏடிஎம் இயந்திரங்களில் 1 ரிங்கிட் கட்டண விலக்கு இன்று முதல் அமல்

கோலாலம்பூர், ஜூலை 1: எந்தவொரு வங்கியின் தானியங்கிப் பணப் பட்டுவாடா இயந்திரம் (ATM) அல்லது ஸ்மார்ட் மறுசுழற்சி இயந்திரம் (SRM) மூலமாக பணம் எடுக்க 1 ரிங்கிட் கட்டண விலக்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இத்திட்டம் பொதுமக்களின் நிதிச் சுமையைக் குறைக்க பெரிதும் உதவும் என இரண்டாம் நிதி அமைச்சர் செனட்டர் டத்தோஸ்ரீ அமிருல் ஹம்சா அசிசான் தெரிவித்துள்ளார்.

மலேசிய நிதி அமைச்சும் உள்நாட்டு வங்கிகளும் இணைந்து மேற்கொண்டுள்ள இம்முயற்சி, குறிப்பாக கிராமப்புறம் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் நிலவும் ஏடிஎம் இயந்திரங்களின் பற்றாக்குறையைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது வங்கிகள் இந்தச் செலவை ஏற்கும் திறன் கொண்டிருப்பதால், 1 ரிங்கிட் கட்டணத்தை ரத்து செய்யுமாறு அரசாங்கம் வங்கிகளை ஊக்குவித்துள்ளது.

இந்த கட்டண விலக்கின் மூலம் மலேசிய டெபிட் கார்டு வைத்துள்ளவர்கள், நாடு முழுவதும் உள்ள 14,000க்கும் மேற்பட்ட ஏடிஎம் மற்றும் எஸ்ஆர்எம் இயந்திரங்களை கட்டணமின்றி இலவசமாகப் பயன்படுத்திப் பணத்தை எடுத்து கொள்ள முடியும்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.