ஊழல், அதிகாரத் துஷ்பிரயோகம் அடங்கிய நான்கு குற்றச்சாட்டுகள்- மலேசிய ஆயுதப்படையின் முன்னாள் தளபதி குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

23 ஜனவரி 2026, 4:24 AM

கோலாலம்பூர், ஜன 23- மலேசிய ஆயுதப்படை (ATM) நல நிதி வாரியத்தின் (TKAT) நிதியை தவறாகப் பயன்படுத்தியது மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக முன்னாள் ஆயுதப் படைத் தளபதி (PAT) டான் ஸ்ரீ முகமது நிஜாம் ஜாபர் மீது கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இருப்பினும், 60 வயதான முகமது நிஜாம், இந்த நான்கு குற்றச்சாட்டுகளையும் மறுத்து விசாரணை கோரியுள்ளார்.

2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில் பெலிகாட் துணி, பாத்திக் துணி மற்றும் இதர பொருட்களை விநியோகிக்கும் ஒப்பந்தங்களை வழங்கியதன் மூலம் லஞ்சம் பெற்றதாகவும், முறையான அனுமதி இன்றி 3 மில்லியன் ரிங்கிட் நிதியை முதலீடு செய்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நீதிமன்றம் அவருக்கு 180,000 ரிங்கிட் பிணைத் தொகையை விதித்ததுடன், அவரது கடப்பிதழை ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டது.

இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை மார்ச் 31-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.