கோலாலம்பூர், பிப் 25 – மலேசிய ஆயுதப் படைகளின் (ஏடிஎம்) அதிகாரிகள், உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்கு மடாணி அரசாங்கம் தொடர்ந்து முன்னுரிமை அளிக்கும்.
வீரர்களின் குடும்ப நலனில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் வீட்டுவசதிப் பிரச்சனையும் இதில் அடங்கும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தற்காப்பு அமைச்சின் உயர் நிர்வாகம் மற்றும் ஏடிஎம் தலைவர்களுடன் விஸ்மா பெர்விராவில் நடைபெற்ற சந்திப்பின் போது தாம் இந்த விஷயத்தை வலியுறுத்தியதாக அன்வார் கூறினார்.
சந்திப்பின் போது, நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு தொடர்பான பல முக்கிய முடிவுகள் குறித்து தமக்கு விளக்கமளிக்கப்பட்டதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
"மேலும் சிக்கலான புவிசார் அரசியல் சவால்கள் மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் ஏடிஎம்-மின் தயார்நிலை மற்றும் திறனை வலுப்படுத்துவதை உறுதிசெய்ய இந்த கலந்துரையாடல் மிகவும் முக்கியமானது," என்றார் அவர்.
"நாட்டின் முக்கிய தற்காப்பு அரணாகவும், பாதுகாக்கப்பட வேண்டிய இறையாண்மையின் சின்னமாகவும் ஏடிஎம் விளங்குகிறது," என்று அவர் குறிப்பிட்டார்.
சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இக்கூட்டத்தில், தற்காப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட் காலெட் நோர்டின், அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் மற்றும் ஆயுதப் படைகளின் தளபதி ஜெனரல் டத்தோ மாலெக் ரசாக் சுலைமான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
-- பெர்னாமா
மலேசிய ஆயுதப் படையினரின் நலனுக்கு மடாணி அரசாங்கம் தொடர்ந்து முன்னுரிமை அளிக்கும்
25 பிப்ரவரி 2026, 1:05 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
மலேசிய ஏடிஎம் இயந்திரங்களில் 1 ரிங்கிட் கட்டண விலக்கு இன்று முதல் அமல்
Shalini Rajamogun
1 ஜூலை 2026

national
ஜூலை முதல் ஏடிஎம்களில் 1 ரிங்கிட் கட்டணமின்றி பணம் எடுக்கலாம்
Shalini Rajamogun
16 ஜூன் 2026

national
1.18 மில்லியன் உயர்கல்வி மாணவர்களுக்கு RM100 மதிப்புள்ள புத்தக வவுச்சர்கள் இன்று முதல் விநியோகம்
Shalini Rajamogun
15 ஜூலை 2026

national
ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுக்க RM1 கட்டணம் வசூலிக்கப்பட்டால் புகார் அளிக்க வலியுறுத்தல்
Shalini Rajamogun
4 ஜூலை 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



