ஜோகூர் வேட்பு மனு தாக்கல் நிறைவு ; சூடு பிடிக்கிறது பரப்புரைகள்

27 ஜூன் 2026, 3:39 AM
ஜோகூர் வேட்பு மனு தாக்கல் நிறைவு ; சூடு பிடிக்கிறது பரப்புரைகள்

ஜோகூர் பாரு, ஜூன் 27- ஜோகூர் மாநிலத்தின் 16-வது மாநிலத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் முடிவுற்றது.

மாநில அளவில் இன்று காலை மணி 9-க்கு திறக்கப்பட்ட வேட்பு மனு தாக்கல் மையங்கள் அனைத்தும் காலை மணி 10-க்கு மூடப்பட்டன.

அதையடுத்து, ஒவ்வொரு தொகுதியிலும் யார், எத்தனை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்ற அதிகாரப்பூர்வ விபர அறிவிப்பின் மீது தற்போது கவனம் திரும்பியுள்ளது.

வேட்பு மனுத் தாக்கல் நிறைவு பெற்றிருக்கும் நிலையில், 14 நாள் தேர்தல் பரப்புரை நடவடிக்கைகள் ஜூலை 10-ஆம் தேதி இரவு மணி 11.59 வரை சூடு பிடிக்கவுள்ளன.

ஜோகூர் மாநிலத் தேர்தல் ஜூலை 11-ஆம் தேதி நடைபெறும் வேளை, 27 லட்சத்து 27 ஆயிரத்து 926 வாக்காளர்கள் அத்தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.