தொழிலாளர் சந்தையில் பெண்களின் பங்களிப்பில் புத்ராஜெயா, சிலாங்கூர் முன்னிலை

26 ஜூன் 2026, 9:27 AM
தொழிலாளர் சந்தையில் பெண்களின் பங்களிப்பில் புத்ராஜெயா, சிலாங்கூர் முன்னிலை

புத்ராஜெயா, ஜூன் 26 – மலேசியாவின் தொழிலாளர் சந்தை கடந்த 2025-ஆம் ஆண்டில் தொடர்ந்து வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதில் பெண்களின் வேலைவாய்ப்புப் பங்களிப்பில் தேசிய அளவிலான சராசரியை விட ஐந்து மாநிலங்கள் கூடுதல் விழுக்காட்டைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளன.

மலேசிய புள்ளியியல் துறை இன்று வெளியிட்ட 2025-ஆம் ஆண்டிற்கான வருடாந்திர தொழிலாளர் சக்தி புள்ளிவிவர அறிக்கையின்படி, தேசிய அளவிலான பெண்களின் தொழிலாளர் பங்களிப்பு விகிதம் 56.6 விழுக்காடாகப் பதிவாகியுள்ளது.

இதில் சிலாங்கூர் மாநிலம் 70.7 விழுக்காட்டுப் பெண்களை வேலைவாய்ப்பில் ஈடுபடுத்தி நாட்டின் முன்னனி மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

புத்ராஜெயா 79.7 விழுக்காட்டுடன் நாட்டின் மிக உயர்ந்த பெண் தொழிலாளர் பங்களிப்பு விகிதத்தைப் பதிவு செய்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சிலாங்கூர் மாநிலம் இரண்டாம் இடத்திலும், கோலாலம்பூர் 66.9 விழுக்காட்டுடனும், மலாக்கா மற்றும் பினாங்கு மாநிலங்கள் தலா 58.3 விழுக்காட்டுடனும் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன .

நாட்டின் வேலையின்மை விகிதம் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகக் குறைந்த அளவாக 3 விழுக்காட்டிற்குச் சரிவடைந்துள்ளது தொழில்துறைக்குக் கிடைத்த பெரும் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

நாட்டின் தொழிலாளர் சக்திக்கு வெளியே இருக்கும் நபர்களின் எண்ணிக்கை சற்றே அதிகரித்து 70 லட்சத்து 30 ஆயிரமாகப் பதிவாகியுள்ளது.

இவர்களில் பெரும்பாலானோர், அதாவது 43.8 விழுக்காட்டினர், இல்லத்தரசிகளாகவும் குடும்பப் பொறுப்புகளைக் கவனிப்பவர்களாகவும் இருப்பதால் வேலை சந்தைக்கு வெளியே இருக்க நேரிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 42.2 விழுக்காட்டினர் தங்களின் கல்வி மற்றும் பயிற்சிகளைத் தொடர்வதன் காரணமாகத் தொழிலாளர் சந்தையில் இன்னும் இணையவில்லை என்பதும் தெரியவந்தது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.