அரசு ஊழியர்களுக்கு அரசாங்கம் குறைந்த வாடகையில் வீடுகளைக் கட்டித் தரவுள்ளது ; பிரதமர் அன்வார்

26 ஜூன் 2026, 8:53 AM
அரசு ஊழியர்களுக்கு அரசாங்கம் குறைந்த வாடகையில் வீடுகளைக் கட்டித் தரவுள்ளது ; பிரதமர் அன்வார்

டெங்கில், ஜூன் 26 - குறைந்த வாடகையைக் கொண்ட அரசு ஊழியர்களுக்கான வீடமைப்புத் திட்டத்தை அரசாங்கம் மேற்கொள்ளவிருப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

பினாங்கு, பேராக், ஜோகூர், நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது, அரசு ஊழியர்கள் குறிப்பாக வீட்டு வாடகை தொடர்பில் கடும் பிரச்சனையை எதிர்நோக்கியிருந்ததைத் தாம் கண்டறிந்ததாக அவர் குறிப்பிட்டார்.

அரசு ஊழியர்களுக்கு 15 முதல் 30 விழுக்காடு வரையில் ஊதிய உயர்வு வழங்கினாலும், ஜோகூர், கோலாலம்பூர், சிரம்பான், ஈப்போ ஆகிய பகுதிகளில் உயர்ந்து வரும் வீட்டு வாடகையைச் சமாளிப்பது, அரசு ஊழியர்களுக்கு இன்னும் பெரும் சுமையாகவே இருப்பதாக நிதியமைச்சருமான அன்வார் கூறினார்.

தற்போதைக்கு குறைந்த வாடகையிலான அரசு வீடமைப்புத் திட்டங்களை மேற்கொள்வதற்கான அரசு நிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதையடுத்து மேம்பாட்டுப் பணிகள் விரைவுப்படுத்தப்படுமென, பெக்கான் டெங்கிலில் வெள்ளிக் கிழமை தொழுகையில் கலந்துக் கொண்டப் பின்னர் பிரதமர் செய்தியாளர்களிடம் இந்த தகவலைத் தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.