AUKU சட்டம் ரத்து; மாணவர்களுக்குக் கூடுதல் ஜனநாயக சுதந்திரம்: பிரதமர் அன்வார்

15 ஆகஸ்ட் 2026, 4:48 AM
AUKU சட்டம் ரத்து; மாணவர்களுக்குக் கூடுதல் ஜனநாயக சுதந்திரம்: பிரதமர் அன்வார்

மலாக்கா, ஆகஸ்ட் 15 — பல்கலைக்கழக மாணவர்களுக்கு முழுமையான ஜனநாயக சுதந்திரத்தை வழங்க, 1971ஆம் ஆண்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரிகள் சட்டமான AUKU-வை அரசாங்கம் ரத்து செய்யவுள்ளதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மற்றும் கருத்துகளின் அடிப்படையில், அந்தச் சட்டத்தில் விரிவான மாற்றங்களை மேற்கொள்ள இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் தெரிவித்தார்.

AUKU சட்டத்தில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட பல்வேறு திருத்தங்களின் மூலம், மாணவர்களுக்குக் கூடுதல் சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தாலும், அவர்களின் வாய்ப்பை மேலும் விரிவுபடுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக அவர் கூறினார்.

அதன் அடிப்படையில் AUKU சட்டத்தை ரத்து செய்வதாக பிரதமர் தெரிவித்தார்.

AUKU சட்டத்தை ரத்து செய்யும் அரசாங்கத்தின் முடிவு, நாட்டின் கல்வித்துறையில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களுக்கு மேலும் வலுசேர்ப்பதுடன், மாணவர்களின் கருத்துச் சுதந்திரம் மற்றும் ஜனநாயகப் பங்கேற்புக்கு விரிவான வாய்ப்புகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.