நாட்டின் பல மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை

22 ஜூன் 2026, 9:45 AM
நாட்டின் பல மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை

கோலாலம்பூர், ஜூன் 22 - சிலாங்கூர் மாநிலத்தின் சில பகுதிகள் மற்றும் நாட்டின் பல மாநிலங்களில் இன்று இரவு 7 மணி வரை இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரித்துள்ளது.

இந்த மோசமான வானிலை எச்சரிக்கையானது சிலாங்கூர் மாநிலத்தின் சபாக் பெர்ணம் மற்றும் உலு சிலாங்கூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது.

இதனுடன், பேராக் மாநிலத்தின் கெரியான், லாருட், மாடாங் மற்றும் செலாமா, உலு பேராக், கிந்தா, பேராக் தெங்கா, காம்பார், பாகான் டத்தோ, ஹிலிர் பேராக் மற்றும் பாடாங் பத்தாங் ஆகிய மாவட்டங்களிலும் இந்த வானிலை நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் கிழக்குக் கரைப் பகுதியில், திரங்கானுவின் கோலா நெருஸ், உலு திரங்கானு, கோலா திரங்கானு, மாராங், டுங்குன் மற்றும் கெமாமான் ஆகிய இடங்களுக்கும், பகாங் மாநிலத்தின் கேமரன் மலை, லிப்பிஸ் மற்றும் ரவுப் ஆகிய பகுதிகளுக்கும் இந்த வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நெகிரி செம்பிலான் மாநிலத்தின் கோலா பிலா மற்றும் ஜெம்போல் ஆகிய பகுதிகளிலும் இதே போன்ற வானிலை நிலவக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மலேசியாவைப் பொறுத்தவரை, சரவாக் மற்றும் சபாவிலும் பல இடங்கள் இந்த வானிலையால் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவு பதிவாகி, அது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் போது மட்டுமே இத்தகைய இடிமின்னல் எச்சரிக்கைகள் விடுக்கப்படும் என வானிலை ஆய்வு மையம் விளக்கியுள்ளது.

இந்த எச்சரிக்கையானது, வெளியிடப்பட்டதிலிருந்து அதிகபட்சமாக ஆறு மணி நேரம் மட்டுமே செல்லுபடியாகும் ஒரு குறுகிய கால வானிலை எச்சரிக்கை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்குமாறும், தற்போதைய வானிலை நிலவரங்களை வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ இணையப்பக்கம், (myCuaca) செயலி அல்லது சமூக ஊடகங்களின் வழி தொடர்ந்து கண்காணிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.