பெட்டாலிங் ஜெயா, ஜூன் 23 – 6 மாநிலங்களில் இன்று மாலை 4.00 மணி வரை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெர்லிஸ், கெடா மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்களின் அனைத்துப் பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பேராக் மாநிலத்தின் கிரியான், லாருட், மாதாங், செலாமா, உலு பேராக், கோலா கங்சார், மாஞ்சோங், கிந்தா, பேராக் தெங்கா மற்றும் கம்பார் ஆகிய மாவட்டங்களும் இந்த மோசமான வானிலை மாற்றத்தால் பாதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், பகாங் மாநிலத்தின் கேமரன் மலைப் பகுதியிலும், கிழக்கு மலேசியாவான சரவாக்கின் கபிட் (கபிட், புக்கிட் மாபோங், பெலகா), பிந்துலு (தாதாவ், செபாவ்), மிரி (பெலூரு, மிரி, மாருடி) மற்றும் லிம்பாங் ஆகிய பகுதிகளிலும் மாலை வரை இடியுடன் கூடிய கனமழை தொடர வாய்ப்புள்ளது.
இதனால் பொதுமக்கள் அனைவரும் தங்களின் பாதுகாப்பில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.






