ஷா ஆலம், ஜன 12: கின்ராரா தொகுதியில் B40 குடும்பங்களைச் சேர்ந்த 150 மாணவர்கள், புதிய கல்வியாண்டு தொடங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள RM100 ரொக்க உதவியை பெற்றனர்.
இந்த உதவி, குறைந்த வருமானக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் நலனில் கவனம் செலுத்தும். தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB) ஆதரவில் நடத்தப்பட்ட “செரியா கே செகோலா” (Ceria Ke Sekolah) திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு இந்த உதவி நேரடியாக வழங்கப்பட்டதால், அடிப்படை கல்வி தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் என கின்ராரா மாநில சட்டமன்ற உறுப்பினர் இங் ஸீ ஹான் தெரிவித்தார்.
“இந்த உதவி மூலம் பள்ளி சீருடை, காலணி, பள்ளிப்பை போன்ற தேவையான பொருட்களை வாங்க முடியும்,” என்று அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.
மேலும், சமூக மட்டத்தில் நலன் மற்றும் கல்வி முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் நிறுவனங்களின் உறுதிப்பாட்டுக்கு அவர் பாராட்டையும் தெரிவித்தார்.
“இந்த உதவி மதிப்பில் சிறியதாக இருக்கலாம்; ஆனால் தேவைப்படுவோருக்குப் பெரும் அர்த்தம் கொண்டதாகும்,” என்றார் அவர்.
இந்த உதவி, பெற்றோரின் நிதிச்சுமையை குறைப்பதோடு, மாணவர்கள் புதிய கல்வியாண்டை மேலும் நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் தொடங்க உதவும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
“செரியா கே செகோலா” திட்டம், தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் செயல்படுத்தப்படும் TNB நிறுவனத்தின் சமூக பொறுப்பு (CSR) முயற்சிகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது


